மலைகளில் பிறந்தேன்
மரங்களூடு வளர்ந்தேன்...
மாறும் சூழலுக்கேற்ப
விரிந்தும் ஒடுங்கியும்
நடந்தும் விரைந்தும் திரிகிறேன்...
கரையில் இருந்துகொண்டு
அடைபட்டுக் கிடப்பதாயும்
ஆமைபோல் நடப்பதாயும்
இகழ்வோரே...
"நான் அடைபட்டுக் கிடப்பதால் தான்
உன்னால் கரையில் வாழமுடிகிறது"
சொல்லாமலே செல்கிறேன்
நகைத்தபடியே ....
//"நான் அடைபட்டுக் கிடப்பதால் தான்
பதிலளிநீக்குஉன்னால் கரையில் வாழமுடிகிறது"
சொல்லாமலே செல்கிறேன்
நகைத்தபடியே ....//
அருமை . வாழ்த்துக்கள்
நன்றி...@மதுரை சரவணன்.
பதிலளிநீக்கு